திருப்புகழ் பாடல் 297 – திருத்தணிகை
தந்தந் தனதன தந்தந் தனதன
தந்தந் தனதன …… தனதான
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
வந்துந் தியதிரு …… மதனாலே
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு …… மதனாலே
பங்கம் படுமென் தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு …… கொடியான
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை …… நினையாயோ
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி …… லதனுடே
தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு …… மயிலாடப்
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்
என்றும் புகழ்பெற …… மலாணனும்
பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல …… பெருமாளே.