Thiruppugazh Song 298 – திருப்புகழ் பாடல் 298

திருப்புகழ் பாடல் 298 – திருத்தணிகை

தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன …… தனதான

வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி …… பதிநாடு

வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி …… வயலாக

முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை …… யழையாமுன்

முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு …… கழல்தாராய்

பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் …… மணவாளா

பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த …… ணியில்வேளே

எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
யெட்டுமாக் குலைய …… எறிவேலா

எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய …… பெருமாளே.