Thiruppugazh Song 301 – திருப்புகழ் பாடல் 301

திருப்புகழ் பாடல் 301 – திருத்தணிகை

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் …… தனதான

வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும் …… விழிமாதர்

மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வந் …… துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறுங் …… கவிழாதே

கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் …… கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம் …… புயவேளே

பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் …… புநக்முளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் …… திறல்வேலா

திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் …… பெருமாளே.