திருப்புகழ் பாடல் 302 – குன்றுதோறாடல்
ராகம் – ஹம்ஸத்வனி; தாளம் – கண்டத்ருவம் (17)
(எடுப்பு – /5/5 0 /5)
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்த தனதான
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட …… விசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு …… மதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு …… மழியாதே
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று …… வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த …… கழல்வீரா
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த …… ழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு …… முருகோனே
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட …… பெருமாளே.