Thiruppugazh Song 305 – திருப்புகழ் பாடல் 305

திருப்புகழ் பாடல் 305 – குன்றுதோறாடல்
ராகம் – ஆரபி; தாளம் – அங்கதாளம் (7 1/2)

தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன தந்ததான

தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிரு …… கொங்கையாலுந்

தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம …… யங்கலாமோ

பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
பவன பூரக வேகிக மாகிய …… விந்துநாதம்

பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம் …… வந்துதாராய்

சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபர …… அம்புராசித்

திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு …… றிஞ்சிவாழும்

மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயக ……எங்கள்மானின்

மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாவையு மேவிய …… தம்பிரானே.