Thiruppugazh Song 314 – திருப்புகழ் பாடல் 314

திருப்புகழ் பாடல் 314 – காஞ்சீபுரம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் …… பிறிதேதும்

புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் …… தனைநாளும்

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் …… செயல்பாடித்

திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் …… றருள்வாயே

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் …… திருவாயன்

கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் …… றனையீனும்

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் …… பணிவாரைப்

பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் …… பெருமாளே.