திருப்புகழ் பாடல் 323 – காஞ்சீபுரம்
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் …… தனதான
இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
தியக்கத்திற் றியக்குற்றுச் …… சுழலாதே
எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்
றெடுத்துப்பற் றடுத்தற்பத் …… துழலாதே
சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
றுவக்கிற்பட் டவத்தைப்பட் …… டயராதே
துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்
கடப்பப்பொற் கழற்செப்பித் …… தொழுவேனோ
கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்
குலத்தைத்குத் திரத்தைக்குத் …… தியவேலா
குறத்தத்தைத் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
குலத்துக்குக் குடக்கொற்றக் …… கொடியோனே
கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் …… புரிவோனே
கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப் …… பெருமாளே.