திருப்புகழ் பாடல் 363 | Thiruppugazh Song 363

திருப்புகழ் பாடல் 363 – திருவானைக்காவல்: நாடித் தேடி | Thiruppugazh Song 363

ராகம் – சுத்த சாவேரி
தாளம் – அங்கதாளம் (6)

தகிட – 1 1/2, தகிட – 1 1/2, தகதிமிதக – 3
தானத் தானத் – தனதான

பாடல்

நாடித் தேடித் – தொழுவார்பால்
நானத் தாகத் – திரிவேனோ

மாடக் கூடற் – பதிஞான
வாழ்வைச் சேரத் – தருவாயே

பாடற் காதற் – புரிவோனே
பாலைத் தேனொத் – தருள்வோனே

ஆடற் றோகைக் – கினியோனே
ஆனைக் காவிற் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !