திருப்புகழ் பாடல் 348 | Thiruppugazh Song 348

திருப்புகழ் பாடல் 348 – காஞ்சீபுரம் : மயலோது மந்த | Thiruppugazh Song 348

தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த – தனதான

பாடல்

மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
வசைபேசு கின்ற – மொழியாலும்

மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
மதிநெரு கின்ற – நுதலாலும்

அயிலெநி கர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை – வளையாலும்

அறிவே யழிந்து அயர்வாகி நைந்து
அடியேன் மயங்கி – விடலாமோ

மயிலேறி யன்று நொடி போதி லண்டம்
வலமாக வந்த – குமரேசா

மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
மலைமாது தந்த – முருகேசா

நயவா னுயர்ந்த மணிமாட மும்பர்
நடுவே நிறைந்த – மதிசூழ

நறைவீசு கும்ப குடமேவு கம்பை
நகர்மீத மர்ந்த – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !