திருப்புகழ் பாடல் 358 | Thiruppugazh Song 358

திருப்புகழ் பாடல் 358 – திருவானைக்காவல்: உரைக்காரிகை | Thiruppugazh Song 358

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான – தனதான

பாடல்

உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை – யொன்றுபாட

உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பா ரிலொப்பார்கள் – கண்டிலேன்யான்

குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு – கொண்டுவாபொன்

குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் – மங்குவேனோ

அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
அனற்கே புனற்கேவ – ரைந்தஏடிட்

டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ – மர்ந்தவேளே

திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யா னமுற்றோர்சி – லந்திநூல்செய்

திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி – தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !