திருப்புகழ் பாடல் 63 – திருச்செந்தூர்
ராகம் – ஆரபி; தாளம் – ஆதி
தந்த தனதனன தந்த தனதனன
தந்த தனதனன …… தனதானா
தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட …… வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி …… ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி …… பகர்கோடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட …… மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய …… மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய …… வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு …… மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை …… பெருமாளே.