Thiruppugazh Song 65 – திருப்புகழ் பாடல் 65

திருப்புகழ் பாடல் 65 – திருச்செந்தூர்
ராகம் – பைரவி; தாளம் – திஸ்ர த்ருபுடை (7)

தந்தந்தந் தந்தன தந்தன
தந்தந்தந் தந்தன தந்தன
தந்தந்தந் தந்தன தந்தன …… தனதான

துன்பங்கொண் டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி …… லணுகாதே

இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படி …… யருள்வாயே

நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு …… மிளையோனே

பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்கு வலம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள் …… பெருமாளே.