திருப்புகழ் பாடல் 97 – திருச்செந்தூர்
ராகம் – சிந்து பைரவி; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12)
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த …… தனதான
வந்து வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு …… ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த
செம்பொன் மண்ட பங்க ளும்ப …… யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு
கொங்கை வஞ்சி தஞ்ச மென்று …… மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
பைங்க டம்பு தண்டை கொஞ்சு
செஞ்ச தங்கை தங்கு பங்க …… யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
கந்த ரம்பை செண்ப தங்கொள் …… செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
பண்க டங்க டர்ந்த இன்சொல்
திண்பு னம்பு குந்து கண்டி …… றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்த
கந்த ரங்க லந்த சிந்து
ரஞ்சி றந்து வந்த லம்பு …… ரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர்
சம்பு நன்பு ரந்த ரன்த
ரம்ப லும்பர் கும்பர் நம்பு …… தம்பிரானே.