Thiruppugazh Song 99 – திருப்புகழ் பாடல் 99

திருப்புகழ் பாடல் 99 – திருச்செந்தூர்

தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த …… தனதான

விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி …… யிளைஞோர்தம்

விரிவான சிந்தை யுருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை …… வினையாலே

இதமாகி யின்ப மதுபோத வுண்டு
இனிதாளு மென்று …… மொழிமாதர்

இருளாய துன்ப மருள்மாயை வந்து
எனையீர்வ தென்றும் …… ஒழியாதோ

மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி
வருமால முண்டு …… விடையேறி

மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு …… தருபாலா

அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற
அயில்வேல்கொ டன்று …… பொரும்வீரா

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவாயு கந்த …… பெருமாளே.