திருப்புகழ் பாடல் 47 – திருச்செந்தூர்
தனன தானனத் தனதன தனனாத்
தந்தத் தந்தத் …… தனதான
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித் …… தட்முழ்கிக்
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக் …… குழலாரோ
டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக் …… கடலுடே
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக் …… கழல்தாராய்
ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப் …… புனலாடும்
கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப் …… புகல்வோனே
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்பொற் கம்பத் …… தளமீதும்
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப் …… பெருமாளே.