திருப்புகழ் பாடல் 48 – Thiruppugazh Song 48 – குடர்நிண மென்புசல: Kudarnina Menpusala

திருப்புகழ் பாடல் 48 – திருச்செந்தூர்

தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த …… தானாந்தனனா

குடர்நிண மென்பு சலமல மண்டு
குருதிந ரம்பு …… சீயூன் பொதிதோல்

குலவு குரம்பை முருடு சுமந்து
குனகிம கிழ்ந்து …… நாயேன் தளரா

அடர்மத னம்பை யனையக ருங்க
ணரிவையர் தங்கள் …… தோடோ ய்ந் தயரா

அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியிணை தந்து …… நீயாண் டருள்வாய்

தடவியல் செந்தில் இறையவ நண்பு
தருகுற மங்கை …… வாழ்வாம் புயனே

சரவண கந்த முருகக டம்ப
தனிமயில் கொண்டு …… பார்சூழ்ந் தவனே

சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
தொழவொரு செங்கை …… வேல்வாங் கியவா

துரிதப தங்க இரதப்ர சண்ட
சொரிகடல் நின்ற …… சூராந் தகனே.