வன்புலியின் மீதினிலே
வன்புலியின் மீதினிலே, ஏறி வீர மணிகண்டனே வா…. ஐயப்பா
வீர விளையாடல்களை பாட வாணி தடை கூறவில்லை
கொஞ்சி கொஞ்சி பேசும் உந்தன், அந்த பிள்ளை மொழி கேட்டிடவே….ஐயப்பா
பந்தலத்தான் செய்த தவம், இந்த பாமரன் நான் செய்யவில்லையோ
வில்லும் அம்பும் கையில் எதற்கோ, அந்த வாவரை தான் வெற்றி கொள்ளவோ… ஐயப்பா
வினைகளின் துயரங்களை, வந்து வேட்டையாடி விரட்டிடவோ
பால் எடுக்க புலி எதற்கோ, உந்தன் பார்வை என்ன சக்தி அற்றதோ…. ஐயப்பா
பார்வை ஒன்று போதுமப்பா, என் மேல் பால் பொழிய வேண்டுமப்பா
காந்த மலை ஜ்யோதி என்னை, ஒரு காந்தம் போல் இழுக்குதப்பா…. ஐயப்பா
காமகோடி நாதன் வடிவில், நீயும் காட்சி தர வேண்டுமப்பா
சுவாமியே சரணம் அய்யா, தர்ம சாஸ்தாவே சரணம் அய்யா…. ஐயப்பா
அனு தினம் பூஜை செய்வோம், உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்