தந்தம் ஒரு தந்தம்.
தந்தம் ஒரு தந்தம். கண்டோம்
தந்தது சிவலிங்கம் -என்றும்
ஏக தந்தம் எங்கள்.சொந்தமே -ஐயா
ஏகரட்சம் உன்னால் ஏற்றமே …(1)
உந்தன் அங்கம் பேரண்டம்
அதிலே அண்டும் உயிர்குலமே -(2)
வெள்ளெருக்கு சூடும் தெய்வமே
கணநாதம் உள்ளிருக்கும் நாங்கள். ஷேம்மே .(தந்தம் …
தெருமுனையோரம் ்தரிசனம். ஆகிடும்
எளியவன் இனியவன் ஐயா. நீதானே
அரண்மனை மாடமும் அருகம்புல் மேடையும்
ஒன்றென நின்றது கணபதி நீதானே கதி கதி என்றதும்
கணபதி சேருமே
துதிப்பவர் கைகளில்
துதிக்கையும் சேருமே.
கருத்தினில் ஆடும் கணபதி -நாள்தோறும்
உன் பெயர் சொன்னால் நிம்மத (என்றும்)ி (2)
தலைச்சுழி கோலமோ பிரம்மனின் கோபமோ
கோணல் ஆனால் மனமே கலங்காதோ
வலச்சுழி உன்சுழி வரைந்தவர் தலைச்சுழி
நெளியும் வழியும் உடனே மலராதோ
கடைந்ததும் கிடைப்பதோ பாற்கடல் அமுதமே
கடையாமல் கிடைப்பதோ கணபதி பாதமே
ஜனங்களை ஆளும் அதிபதி
நாள்தோறும் உன் பெயர் சொன்னால் நிம்மதி -என்றும் (1)