அங்காளம்மன் 108 மந்திரங்கள்
- ஓம் அங்கால பரமேஸ்வரி அம்மையே போற்றி
- ஓம் அகிலாண்ட ஈஸ்வரி அன்னையே போற்றி
- ஓம் அகில உலக நாயகியே போற்றி
- ஓம் அன்னம் அளிக்கும் அன்னபூரணியே போற்றி
- ஓம் அன்பு வுரு ஆனவளே போற்றி
- ஓம் அமுதினை ஊட்டிடும் அன்னையே போற்றி
- ஓம் அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி
- ஓம் ஆறாம் வளர்க்கும் நாயகியே போற்றி
- ஓம் அட்சாக்ஷற மந்திரம் படைத்தவளே போற்றி
- ஓம் அருட்பெரும் ஜோதியே போற்றி
- ஓம் அம்பிகை தாயே நீயே போற்றி
- ஓம் அபிராமி அன்னை தாயே போற்றி
- ஓம் அருமறை பொருளே போற்றி
- ஓம் அங்கயற்கண்ணி அம்மையே போற்றி
- ஓம் ஆதிபராசக்தி அன்காலபரமேஸ்வறியே போற்றி
- ஓம் ஆனந்தவல்லி உமையே போற்றி
- ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
- ஓம் ஆவியாய் வந்து அளிப்பாய் போற்றி
- ஓம் ஆன்ம சொரூபிணி அங்காலியே போற்றி
- ஓம் ஆறுமுகன் அன்னை தாயே போற்றி
- ஓம் ஆனந்த நடனமாடும் சிவகாமியே போற்றி
- ஓம் ஆங்காரமாய் அரக்கரை அழித்தாய் போற்றி
- ஓம் அமையை போல் எம்மை காப்பாய் போற்றி
- ஓம் ஆதி சக்தி தாயே போற்றி
- ஓம் ஆனந்த நடனமிட்ட அம்மையே போற்றி
- ஓம் இணை இல்லா ஈஸ்வரி தாயே போற்றி
- ஓம் இந்திரன் வணங்கும் ஈஸ்வரியே போற்றி
- ஓம் இமையமலை வீற்றிருக்கும் அம்மையே போற்றி
- ஓம் இச்சை கிரியை ஈஸ்வரியே போற்றி
- ஓம் இமைப்பில் உலகை ஆக்குவாய் போற்றி
- ஓம் இரவாகி பகலாகி இருப்பவளே போற்றி
- ஓம் இமைப்பில் உலகத்தை அழிப்பாய் போற்றி
- ஓம் ஈஸ்வரி அங்கால பரமேஸ்வறியே போற்றி
- ஓம் ஈசனார் துணைவி ஈஸ்வரியே போற்றி
- ஓம் ஈடில்லா தெய்வம் நீயே போற்றி
- ஓம் ஈசனாரே வணங்கும் ஈஸ்வரியே போற்றி
- ஓம் ஈரேழு உலகத்தை படைத்தவளே போற்றி
- ஓம் ஈடு இணையற்ற இறைவியே போற்றி
- ஓம் ஈசனின் பிரம்மையை நீக்கினாய் போற்றி
- ஓம் உலகை ஈன்ற உமையே போற்றி
- ஓம் உமையார் அம்மையே போற்றி
- ஓம் உருவம் அனைத்தும் ஆனாய் போற்றி
- ஓம் உக்தியுடன் உலகத்தை படைத்தாய் போற்றி
- ஓம் உடுக்கை ஒளியில் வருவாய் போற்றி
- ஓம் உலகின் உதயமே சக்தியே போற்றி
- ஓம் உள்ளத்தில் கோவில் கொண்ட அங்காலியே போற்றி
- ஓம் உண்ணாமலை தாயே நீயே போற்றி
- ஓம் உள்ள மலரை வுவந்தவளே போற்றி
- ஓம் ஊனும் உயிரும் ஆனவளே போற்றி
- ஓம் ஊரும் இனத்திற்கும் உயிரானாய் போற்றி
- ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
- ஓம் ஊற்றாகி நீராகி உயிரானவளே போற்றி
- ஓம் ஊழ்வினை களையும் உமையே போற்றி
- ஓம் ஊக்கம் அருள்வாய் அன்காளியே போற்றி
- ஓம் எங்கும் நிறைந்த பரம்பொருளே போற்றி
- ஓம் எங்களை வாழ்விக்கும் அன்காளியே போற்றி
- ஓம் எண்குண வள்ளி ஈஸ்வரியே போற்றி
- ஓம் எழில்மிகு தேவ தேவியே போற்றி
- ஓம் என்றும் தூய வடிவினளே போற்றி
- ஓம் என்ன மலரில் எழுந்தவளே போற்றி
- ஓம் எல்லா வடிவும் எடுத்தவளே போற்றி
- ஓம் எழில்மிகு தேவி அங்காளியே போற்றி
- ஓம் எல்லா தந்திரமும் படைத்தவளே போற்றி
- ஓம் எம் குல செல்வி இறைவியே போற்றி
- ஓம் எல்லா மந்திரமும் ஆனவளே போற்றி
- ஓம் எந்திரத்தின் ஆற்றலாகி நின்றவளே போற்றி
- ஓம் ஏழு உலகையும் படைத்தாய் போற்றி
- ஓம் ஏட்டில் அடங்கா இறைவியே போற்றி
- ஓம் ஏகம்பன் மனைவி ஈஸ்வரியே போற்றி
- ஓம் ஏகாந்த ரூபினி அங்காலியே போற்றி
- ஓம் ஏக்கம் தவிர்க்கும் தாயே போற்றி
- ஓம் ஏழைக்கு இறங்கும் அன்னையே போற்றி
- ஓம் ஏழுலக அம்பிகை அங்காலியே போற்றி
- ஓம் ஏழு பிறப்பும் அறுப்பாய் போற்றி
- ஓம் ஐந்து கரத்தனை படித்தாய் போற்றி
- ஓம் ஐயம் அகற்றும் அம்மையே போற்றி
- ஓம் அய்ங்கரன் அன்னையே போற்றி
- ஓம் ஐப்பசியும் பணிவேன் அன்னையே போற்றி
- ஓம் ஐயமும் தெளிவும் அடைந்தாய் போற்றி
- ஓம் ஐயனும் பாதமே அன்காளியே போற்றி
- ஓம் ஐம் பூதமும் நீயே அன்னையே போற்றி
- ஓம் ஐம்புலன் இயங்கும் சக்தியே போற்றி
- ஓம் ஐம் பொறி செயலும் நீயே போற்றி
- ஓம் ஒருபோதும் நான் உன்னை மறவேன் போற்றி
- ஓம் ஒழித்திட்டாய் அரக்கரை அன்னையே போற்றி
- ஓம் ஒருமாரி உருமாறி கருமாரியே போற்றி
- ஓம் ஒன்பான் சுவையே தாயே போற்றி
- ஓம் ஒலி ஒளியான அங்காலியே போற்றி
- ஓம் ஓம் எனும் மந்திரம் படைத்தாய் போற்றி
- ஓம் ஓதற்கு அறியா சக்தியே போற்றி
- ஓம் ஒன்காளியாய் உலகை படித்தவளே போற்றி
- ஓம் ஓடி வந்து துதிபேன் காப்பாய் போற்றி
- ஓம் ஓங்கார சக்தி அங்காலியே போற்றி
- ஓம் கல்வி கலையின் உருவமே போற்றி
- ஓம் சமயபுரத்தில் வீற்றிருக்கும் சமயபுரத்தாளே போற்றி
- ஓம் திருவேற்காடு கருமாரி தாயே போற்றி
- ஓம் காஞ்சி காமாட்சி அம்மையே போற்றி
- ஓம் மதுரை மீனாக்ஷி தாயே போற்றி
- ஓம் மாங்காடு மங்கள நாயகியே போற்றி
- ஓம் பெரியபாளையம் பவானி அன்னையே போற்றி
- ஓம் கல்கத்தா காளிகா தேவியே போற்றி
- ஓம் கொல்லூர் மூகாம்பிகை அம்மையே போற்றி ஓம்
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னையே போற்றி
- ஓம் மேல்மலையனூர் அங்கால பரமேஸ்வறியே போற்றி
- ஓம் தஞ்சம் என வந்தோரை காப்பவளே போற்றி
- ஓம் தயவுடன் எங்களை ஆதரிப்பாய் போற்றி
- ஓம் மங்கள ரூபினி மாயவன் தங்கை மலையனூர் தாயே போற்றி
- ஓம் மங்கள மங்கையர் திலகமே போற்றி
- ஓம் மாங்கல்யம் காக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வறியே போற்றி ! போற்றி !