பம்பை நதிக்கரையே… உந்தன்
பெருமைக்கு இணை இல்லையே
அரிஹரன் திருவருளே நீதான்
அறிந்தாய் முதன் முதலே
ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி. (பம்பை).
தொழுவார் ஐயப்பன் திருவடியில்
அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்
அருள் மழை பொழிந்தது உன் மடியில்
அருள் மழை பொழிந்தது உன் மடியில். (பம்பை).
அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி
அனுதினம் வருவார் கோவிலிலே
அவரவர் மனதில் அருளாய் இறங்கி
கருணையை பொழிவான் வாழ்வினிலே
கருணையை பொழிவான் வாழ்வினிலே. (பம்பை).
சரணம் பாடி வருவோர்க்கெல்லாம்
சாந்தியை கொடுக்கும் சபரிமலை
ஒருமுறை தரிசனம் கண்டால் போதும்
பிறவியின் பயனே தெய்வநிலை
பிறவியின் பயனே தெய்வநிலை. (பம்பை).