கார்த்திகை பூங்காவை விரதம்
காத்திடும் திருவேளை
மாலையணிந்தவர் கோவிலை நாடிட ஒன்று சேரும் நேரம்
நோன்பு ஆரமப நன்னேரம் (கார்த்திகை)
சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ சரணம் சரணம் ஐயப்போ
சாதிபேதம் ஒன்றுமில்லை சாதிபேதம் ஒன்றுமில்லை
ஏற்ற தாழ்வு ஏதுமில்லை
மாலையிட்ட மாந்தர்க்கு மனம் சுத்தமாகும் – என்றும்
மணிகண்டன் புகழைப்பாட மகிழ்ச்சிகள் கூடும் (கார்த்திகை)
பேட்டை துள்ளி பாட்டுப்பாடி
பேட்டை துள்ளி பாட்டுப்பாடி
காடுகளும் மலையுமேறி
கூட்டமுடன் பதினெட்டாம் படிகளேறி
சுவாமியைக் கண்டு தொழுது புண்ணியம் நாட
எல்லாத் தீமைகளும் மறைந்து விட புனிதம் கூட ( கார்த்திகை)