பருவங்கள் ஆறும் பம்பாநதியில் குளித்து திருப்படி ஏறும்
கரங்கள் ஏழின் அலைமுறை எல்லாம் பாதசரணம் பாடும் (பருவ)
நாமம் கேட்கும் ரசம் ஐயனின் நாமம் கேட்கும் சுகம்
ஆடும் மலைமுகில் சூடும் மலையினில் தவழும் இளந்தென்றல்
அடவிகள் தாளமுணர்த்தி பாடும் பதவஜனம் புண்யம்
சபரீசன் பதவஜனம் புண்யம் (பருவ)
அழகின் இருமுடி ஏந்தி ஆனந்தக் கண்ணீர் தெளிக்கும் மேகம்
வானவில் தம்புரு மீட்டிப்பாடும் பதமலர்கள் சரணம்
ஐயனின் பதமலர்கள் சரணம் (பருவ)
தங்க கம்பி முறுக்கி பூபாளராகமாலாபனை உதயம்
மண்டல கால புது மொழியாகும் நாம ஸ்வரண சுகம்
ஐயப்பன் நாம ஸ்வரண சுகம் (பருவ)