சுவாமி சங்கீத தேன் பொழியும்
ஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி)
ஜெபமாலையாய் எந்த கைகளில்
மந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன்
சுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி)
ப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் யாய் இருந்து
பொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன்
புண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா
புவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி)
மனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென
மணிகண்ட சுவாமி அருள் செய்தாய்
மதபேதங்களும் மாய்ந்திர வேண்டுமென்னும்
மதி நலம் தரும் உரையான் கேட்டேன் (சுவாமி)
சீர்மேவும் தத்துவம் என்குரல் நாதத்தில்
பாரெங்கும் பரவிட இசைப்பேன்
ஆர்வத்தினாலேயான் பாட மனத்திரையில்
தேவா உன் உருவம் நிலைக்கும்
குளமெனும் பெரும் கோவில் உனக்காகவே (சுவாமி)