திருநீல கண்டழகன் நல்லப்பன்
பாற்கடல் பரந்தாமன் நல்லம்மா
வேல் முருகன் செல்லத்தம்பி
பிள்ளையாரின் நல்லதம்பி
வேட்டையில் திருமகனே ஹரிஹரசுதன்
ஐயன் ஐயன் ஐயப்பா (திரு)
ஐயன் ஐயன் ஆனந்ததித்தோம்
ஐயன் ஐயன் ஆனந்த தித்தோம்
தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம்
ஐயன் ஐயன் ஆனந்ததித்தோம்
உன் வாக்கு வலுத்தது போல மெய்யவனே
பஞ்சவர்ண கோலமிட்ட நல்தீபம்
நெற்றிமேல் பஞ்சமி கலையழகு
பொற்பாதம் சரணமென்று குலுங்கும் நற்சிலம்பு (ஐயன்)
பேட்டை துள்ளி சரங்குத்தி வினையொழிக
கரிமலையில் கழுந்துடியில் தாளம் தருக
கன்னி நான் மலையேற பலம் தருக
அழைக்குமுன் ஓடிவரும் யைப்பனே வரம் தருக
ஐயன் ஐயன் ஆனந்ததித்தோம்
ஐயன் ஐயன் ஆனந்த தித்தோம்
தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம்
ஐயன் ஐயன் ஆனந்ததித்தோம் (திரு)