வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா
வன்புலி மேல் ஏறிவரும் எங்கள்
வீரமணிகண்டனே வா உந்தன்
வீரவிளையாடல்களைப் பாட வாணி
தடை போடவில்லை!
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி
பிஞ்சுமுகம் பார்க்கலையே ஐயப்பா அந்த
பந்தளத்தான் செய்த தவம்
இந்த பாமரன்யான் செய்யவில்லையோ!
அம்பும் வில்லும் கையில் எதற்கோ அந்த
வாபரனை வெற்றி கொள்ளவோ ஐயப்பா
உந்தன் பக்தர்களின் குறைகளெல்லாம்
நீயும் வேட்டையாடி விரட்டிடவோ!
பாலெடுக்க புலி எதற்கோ உந்தன்
பார்வைதான் சக்தியற்றதோ ஐயப்பா
உந்தன் பார்வை ஒன்று போதுமய்யா
அருள் பால்பொழிய வேண்டுமய்யா!
கற்பூரப் பிரியனின் பார்வை எங்களை ஒரு
காந்தம் போல் இழுக்குதய்யா ஐயப்பா
கதிரேசன் தம்பியே கண்கண்ட தெய்வமே கதாதரன் மகனே உன்னைக் காண அருள் செய்வாய் ஐயப்பா!