விநாயகர் சிந்தனை ஸ்லோகம்
சிந்தித் தவர்க்கருள்
கணபதி ஜெய ஜெய!
சீரிய வானைக்
கன்றே ஜெய ஜெய!
அன்புடை யமரரைக்
காப்பாய் ஜெய ஜெய!
ஆவித் துணையே
கணபதி ஜெய ஜெய!
இண்டைச் சடைமுடி
யிறைவா ஜெய ஜெய!
ஈசன் தந்தருள்
மகனே ஜெய ஜெய!
உன்னிய கருமம்
முடிப்பாய் ஜெய ஜெய!
ஊர்நவ சக்தி
யுகந்தாய் ஜெய ஜெய!
எம்பெரு மானே
யிறைவா ஜெய ஜெய!
ஏழுல குந்தொழ
நின்றாய் ஜெய ஜெய!
ஐயா கணபதி
நம்பியே ஜெய ஜெய!
ஒற்றை மருப்புடை
வித்தகா ஜெய ஜெய!
ஓங்கிய வானைக்
கன்றே ஜெய ஜெய!
ஔவிய மில்லா
அருளே ஜெய ஜெய!
அஃகர வஸ்து
வானவா ஜெய ஜெய!
கணபதி யென் வினை
களைவாய் ஜெய ஜெய!
ஙப்போர் மழுவொன்
றேந்தியே ஜெய ஜெய!
சங்கரன் மகனே
சதுரா ஜெய ஜெய!
ஞயநம் பினர்பா
லாடிய ஜெய ஜெய!
இடம்படு விக்கின
விநாயகா ஜெய ஜெய!
இணங்கிய பிள்ளைகள்
தலைவா ஜெய ஜெய!
தத்துவ மறைதெரி
வித்தகா ஜெய ஜெய!
நன்னெறி விக்கின
விநாயகா ஜெய ஜெய!
பள்ளியி லுறைதரும்
பிள்ளாய் ஜெய ஜெய!
மன்று ளாடும்
மணியே ஜெய ஜெய!
இயங்கிய ஞானக்
குன்றே ஜெய ஜெய!
அரவக் கிண்கிணி
யார்ப்பாய் ஜெய ஜெய!
இலகக் கொம்பொன்
றேந்தியே ஜெய ஜெய!
வஞ்சனை பலவுந்
தீர்ப்பாய் ஜெய ஜெய!
அழகிய வானைக்
கன்றே ஜெய ஜெய!
இளமத யானை
முகத்தாய் ஜெய ஜெய!
இரகுபதி விக்கின
விநாயகா ஜெய ஜெய!
அனந்தலோ டாதியி
லடிதொழ வருளே!!!