Diwali Special Recipes- Makki Kaa Chivta

மக்கி கா சிவ்டா

தேவையானவை:

கார்ன் சிப்ஸ் – அரை கப்,
அவல் – அரை கப்,
ஓமப்பொடி – அரை கப்,
வறுத்த பாசிப்பருப்பு – அரை கப்,
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 20,
பாதாம் – 10,
பிஸ்தா – 10,
பரங்கிக்காய் விதை – 1 டேபிள் ஸ்பூன்,
சாரைப்பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2 (மெல்லிய வளையமாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
கிஸ்மிஸ் – 1 டேபிள் ஸ்பூன்,
பேரீச்சை – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்),
உப்பு – அரை டேபிள் ஸ்பூன்,
பனங்கற்கண்டு பொடித்தது – 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெயைக் காய வைத்து வலை போட்ட கரண்டியில போட்டு வேர்க்கடலையைப் பொன்னிறமாக வறுக்கவும். அதேபோல நிதானமான தீயில் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா, பரங்கி விதை, சாரைப்பருப்பு எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். அதே எண்ணெயில் பச்சைமிளகாயை க்ரிஸ்பாக வறுக்கவும். கறுவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் மொறுமொறுப்பாக வறுத்து, இன்னொரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
அவலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரிந்ததும் எடுக்கவும். இதில் கார்ன் சிப்ஸ், ஓமப்பொடி, வறுத்த பாசிப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா, பரங்கிவிதை, சாரைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, கிஸ்மிஸ், பேரீச்சை ஆகியவற்றையும் கலக்கவும். உப்பையும் பனங்கற்கண்டுப் பொடியையும் தூவி நன்கு குலுக்கி பரிமாறவும்.