ராகி தட்டை
தேவையானவை:
கேழ்வரகு மாவு – 2 கப், அரிசி மாவு – அரை கப்,
வறுத்து அரைத்த உளுந்த மாவு – அரை கப்,
ஊறவைத்த கடலைப் பருப்பு – 1
டேபிள் ஸ்பூன், எள் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
நெய் அல்லது வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு மாவில் அரிசிமாவு, உளுந்து மாவு, எள், சீரகம், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, ஊறவைத்த கடலைப் பருப்பை சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். காய்ச்சிய எண்ணெய் சிறிது ஊற்றி மென்மையாகப் பிசைந்து சப்பாத்திக் கட்டையில் தேய்த்து அல்லது வட்டமாகக் கையால் மெலிதாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.