சிவன் கனவில் வந்தால் என்ன பலன் | Sivan Kanavil Vanthal Enna Palan

சிவன் கனவில் வந்தால் என்ன பலன் | Sivan Kanavil Vanthal Enna Palan

நாம் தூங்கும்போது கனவு வருவது வழக்கம். ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து பல வித கனவுகள் வருவது உண்டு. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தெய்வங்கள், கோவில் கோபுரங்கள், சாமி சிலைகள், இது போன்ற நிறையவை ஒருவரது கனவில் வரலாம். இந்த பதிவில் சிவன் கனவில் வந்தால் என்ன பலன் என்பதைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

சிவன் கனவில் வந்தால் என்ன பலன்

  • சிவன் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும் என்பதை சுட்டி காட்டுகிறது.
  • தீராத நோயினால் நீண்ட நாட்கள் அவதிப்பட்டு வருபவர்கள் கனவில் சிவன் வந்தால் அந்த நோய் விரைவில் நிவர்த்தி ஆகிவிடும்.

சிவனும் பார்வதியும் கனவில் வந்தால்

  • சிவனும் பார்வதியும் கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து சந்தோசங்கள் அதிகரிக்கும்.
  • தொழிலில் லாபங்கள் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கவும்.
  • பொன் பொருள் சேர்க்கைகள் உங்களை வந்து சேரும்.
  • சிவ பார்வதி பூஜை வழிபாடு நன்மை பயக்கும்.

நடராஜன் கனவில் வந்தால்

  • நடராஜன் கனவில் வந்தால் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் அல்லது நமக்கு வரப்போகும் பிரச்சனைக்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கும்.
  • திருவாதிரை நாளில் சிவன் கோவில் சென்று சிவ தரிசனம் செய்த பிறகு நடராஜர் தரிசனம் கண்டு வருவது சிறப்பு.

சிவலிங்கம் கனவில் வந்தால்

  • சிவலிங்கம் கனவில் வந்தால் வெற்றிகள் உங்களைத் தேடி வரும்.
  • வாழ்க்கையில் நீங்கள் பல தடைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும் அல்லது தடைகள் உங்களைத் தேடி வந்தாலும் அந்த தடைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
  • அருகில் உள்ள சிவன் கோவில் லிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை செய்வது சிறப்பு.

சிவனின் திரிசூலம் கனவில் வந்தால்

  • சிவனின் திரிசூலம் கனவில் வந்தால் நீங்கள் கடந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மற்றும் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்.
  • சிவ வழிபாடு நன்மை பயக்கும்

சிவனின் பிறை நிலவு கனவில் வந்தால்

  • படிக்கும் மாணவர்கள் கனவில் வந்தால் அவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள் குழப்பங்கள் எதுவும் இருந்தால் அது நீங்கி ஒரு முடிவுக்கு வருவீர்கள்.
  • திங்கள் கிழமைகளில் சிவ வழிபாடு நன்மை பயக்கும்.
  • பௌர்ணமி நாளில் சிவ வழிபாடும் கிரி வலம் வருவதும் கூடுதல் சிறப்பு.

நந்தி கனவில் வந்தால்

  • நந்தி கனவில் வந்தால் வாகனம் வாங்க நினைத்தால் அவர்கள் விரைவில் வாகனம் வாங்கி விடுவார்கள் வாகனம் வாங்க முடிவில் இருந்தால் அவர்கள் விரைவில் வாகனம் வாங்குவதற்கான ஒரு ஆலோசனை கிடைக்கும்.
  • சிவன் கோவிலுக்கு த பிரதோஷ நாட்களில் சிவன் மற்றும் நந்திக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து அபிஷேக பூஜை பார்த்து வழிபாடு செய்வது சிறப்பு.
  • பிரதோஷ வழிபாடு, நந்தி வழிபாடு நன்மை பயக்கும்.

சிவனின் மூன்றாம் கண் கனவில் வந்தால்

  • சிவனின் மூன்றாம் கண் கனவில் வந்தால் வாழ்வில் அடுத்த நடக்க இருக்கின்ற பிரச்சனையை குறிக்கிறது அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • சிவன் கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக தியானம் செய்து வருவது கூடுதல் சிறப்பு.

சிவனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவில் வந்தால்

  • சிவனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு வந்தால் சிவன் மீது நீங்கள் அதிக பக்தி வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
  • சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேக பூஜை பார்ப்பது நல்லது.
  • சிவன் கோவிலுக்கு திங்கள் கிழமைகளிலோ அல்லது பிரதோஷ நாட்களிலோ சிவன் மற்றும் நந்திக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்தல் சிறப்பு.