வாராஹி அம்மன் கோவில் எங்கு உள்ளது? | Where is Varahi Amman Temple Located?

வராகி அம்மன் கோயில்கள் | வாராஹி அம்மன் கோவில் எங்கு உள்ளது? | Where is Varahi Amman Temple Located?

வாராகி அம்மன் கோவில் எந்த ஊரில் உள்ளது?

  • தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியாக உள்ளது.
  • திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியில் அருள்மிகு செரைக்கன்னிமார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது
  • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.[10]
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது.[11]
  • கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.
  • தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது
  • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சப்தமாதா தனி சன்னதியாக சப்தமாதாகள் உடன் வாரஹி அம்மன் உள்ளார்.
  • இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை என்ற ஊரில் உத்தரகோசமங்கை மங்கலநாதர் திருக்கோயிலுக்கு 200மீ தொலைவில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது.
  • இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், கொக்குவில் மேற்கு, கொக்குவில் என்ற ஊரில் வாராகி அம்மனுக்குத் தனிக் கோவில் உள்ளது.
  • திருச்சி எழில்நகர் அருள்மிகு லெட்சுமி கணபதி ஆலயத்தில், வராகி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது.