தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019:
அன்பார்ந்த தனுசு ராசி நேயர்களே!
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 08.39 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
தங்களது ராசிக்கு 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 12 ஆம் இடத்திற்கு செல்கிறார். 12 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதுவதற்கில்லை. குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 6 ஆம் இடம் சத்ரு மற்றும் ரோகத்தையும் 8 ஆம் இடம் இடர்பாடுகள் மற்றும் சிரமங்களையும் குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
தனுசு ராசி – தொழிலும் வியாபராமும்:
பணிபுரியும் இடத்தில வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேண்டாத சிந்தனைகள் தலை தூக்கும். வேலைகள் தாமதமாகும். உற்பத்தித் திறன் குறையும். எனவே மிக எச்சரிக்கையுடன் செயல்படவும்.
தனுசு ராசி – பொருளாதாரம்:
செல்வ நிலை திருப்தி அளிக்கவில்லை. செலவுகளுக்கு பஞ்சமில்லை. வரவை விட செலவு தான் அதிகம். சுப செலவுகளும் உண்டு. வேண்டாத பொருட்களை வாங்க வேண்டாம். வீட்டுச் செலவுகள் கூடிக்கொண்டே போகும். வீட்டில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு புது செலவுகளை கொண்டு வருவர்.
தனுசு ராசி – குடும்பம்:
குடும்ப நபர்கள் அவர்களது பொறுமையின்மையை உங்களிடம் காட்டுவர். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிந்தனையிலும் முடிவிலும் அதிக தடுமாற்றங்கள் உண்டு. இதனை முழுவதுமாக தவிர்க்கவும்.
தனுசு ராசி – கல்வி:
அயல் நாட்டில் கல்வி பயில இது உகந்த காலமாகும். விரும்பிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கப் பெறும். பிறரை சார்ந்து இராது நீங்களே முடிவுகளை மேற்கொள்வது நல்லது.
தனுசு ராசி – காதலும் திருமணமும்:
வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் அதிகம். அபிப்பிராய பேதமும் ஏற்படும். அபிப்பிராயங்களை சொல்லும் பொழுது ஜாக்கிரதையாக தெரிவிக்கவும். தகவல் பரிமாற்றம் சாதகமாக இல்லை. எனவே தகவல்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படுகிறதா என்று உறுதி செய்யவும்.
தனுசு ராசி – ஆரோக்கியம்:
அதிக வேலைப் பளுவால் களைப்பு உண்டாகும். மூட்டு வலி காணப்படுகின்றது. துரித உணவுகளை தவிர்க்கவும்.இரத்த அழுத்தம் மிகுந்து காண வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
- அதிக செலவுகள்
- அபிப்பிராய பேதங்கள்
- உடல் களைப்பு
- தொழில் முடக்கம்
- சுப செலவுகள்
பரிகாரம்:
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஹோமம் செய்யவும்.