Diwali Special Recipes – Mohandhal

மோகன்தால்

தேவையானவை:

கடலை மாவு – 2 கப்,
நெய் – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 2 கப்,
பால் – அரை கப்,
பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்,
பிஸ்தா -1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை கப் பால் ஊற்றி, பிசைந்து வைக்கவும். நெய்யை ஒரு பானில் காயவைத்து, இந்த மாவு கலவையைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து ஆறவிடவும்.
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கம்பிப்பாகு காய்ச்சவும். நெய்யில் வறுத்த மாவைத் தூவிக் கிளறிவிடவும். நன்கு கிளறி சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகத் தட்டி, சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவைத் தூவி சதுரமாகத் துண்டுகள் வெட்டி ஆறவிடவும். 4 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்தவும்.