ஆலு புஜியா
தேவையானவை:
கடலை மாவு – 2 கப்,
வேகவைத்த உருளைக்கிழங்கு – 4,
உப்பு – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை,
கரம் மசாலா – அரை டீஸ்பூன்,
எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
கடலை மாவில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா சேர்த்து உருளைக்கிழங்கை மசித்துப் போட்டு தேவையானால் சிறிது நீர் தெளித்து மென்மையாகப் பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும். பின்னர் கையில் எண்ணெய் தொட்டு மாவை உருட்டி ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயைக் காயவைத்துப் பிழிந்தெடுக்கவும். சுவையான ஆலு புஜியா தயார்.