சங்கரபாலி
தேவையானவை:
மைதா – 2 கப்,
ரவை – 1 கப்,
பால் – அரை கப்,
டால்டா அல்லது நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
ஓமம் – 2 டீஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மைதா, ரவா, ஓமம், உப்பு, மிளகாய் தூளைக் கலக்கவும். டால்டா அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, பால் சேர்த்துப் பதினைந்து நிமிடங்கள் நன்கு பிசையவும். 20 நிமிடங்கள் ஊறவிடவும். கனமான சப்பாத்தியைப் போலத் தேய்த்து டைமன் ஷேப்பில் துண்டுகள் செய்து எண்ணெயைக் காயவைத்து பொரித்தெடுக்கவும்.