முந்திரி, பாதாம், பிஸ்தா ரோல்
தேவையானவை:
முந்திரி – 100 கிராம்,
பாதாம் – 100 கிராம்,
பிஸ்தா -100 கிராம்,
தூள் செய்த சர்க்கரை – 300 கிராம்,
கேசரி கலர் – 1
சிட்டிகை, பச்சை கலர் – 1
சிட்டிகை, நெய்- 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
முந்திரி, பாதாம், பிஸ்தாவை நன்கு காயவைத்துத் தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும், சர்க்கரையைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி, அதில் தனித்தனியாக பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டுக் கிளறவும். பாதாமில் கேசரி கலரையும், பிஸ்தாவில் பச்சை கலரையும் சேர்க்கவும். சுருண்டதும் இறக்கி நெய் தடவிய சப்பாத்திப் பலகையில் போட்டு மெல்லிசாக தனித்தனியாக செவ்வக வடிவில் திரட்டவும். மூன்றையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து மெல்லிய ரோலாக சுருட்டவும். ரோலை குறுக்குவாட்டில் வெட்டிப் பரிமாறவும். மூன்று வண்ணங்களில் அழகான ட்ரைகலர் நட்ஸ் ரோல் தயார்.