பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள் | Benefits of Pradosham Pooja

பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள் | Benefits of Pradosham Pooja

 1. துன்பம் நீங்கி – இன்பம் எய்துவர்.
 2. மலடு நீங்கி – மகப்பேறு பெறுவர்
 3. கடன் நீங்கி – தனம் பெறுவர்
 4. வறுமை ஒழிந்து – செல்வம் சேர்ப்பர்
 5. நோய் நீங்கி – நலம் பெறுவர்.
 6. அறியாமை நீங்கி – ஞானம் பெறுவர்
 7. பாவம் தொலைந்து – புண்ணியம் எய்துவர்
 8. பிறவி ஒழித்து – முக்தி அடைவர்

சனி மஹா பிரதோஷம் வழிபாட்டு பலன்கள்:

 • சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபவாசம் இருந்து
 • சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வருடம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
 • அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹாபாதகம் ஏற்படும். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.