Tag «ஐயப்பன் பாடல்கள்»

Arul Manakkum Aandavane Ayyappa – K. Veeramani Ayyappan Songs

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா  உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா என்னை உன்னுள் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா (அருள்) ஐம்புலனாம் புலியைவெல்லும் ஐயப்பா ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா அருள் மணக்கும் …

Hariyum Aranum Inainthu Petra Selvanam

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன் இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன் ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன் உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன் எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன் ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன் – எங்கள் அய்யப்பன்  ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன் ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன் ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன் – எங்கள் அய்யப்பன்

Kanni Moola Ganapathiye – K. Veeramani Ayyappan Songs

காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை கன்னிமூல‌ கணபதியே நீ பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும் கன்னிமூல‌ கண‌பதியே காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும் பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே மாளிகை புறத்து மஞ்சம்மா மாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே அய்யனே உந்தன் அழகைக் கண்டால் பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான‌ சக்தி பிறக்குது நெய்யபிஷேகம் செய்யும்போது உள்ளத்திலே மெய் சிலிர்க்குது மலையிலே தையினிலே உந்தன் சந்நதிகாண‌ உள்ளத்தில் ஆவல் பொங்கிடுதே சத்தியமான‌ …

K. Veeramani Ayyappan Songs – Pandhalaraja Pambaavasa

சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா) அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா) தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா அச்சம் …

K. Veeramani Ayyappan Songs – Saranam Vilithal Maranam Illai

சாமியே… ஐ சரணம் ஐயப்போ சரண‌ கோஷப்பிரியனே சரணம் ஐயப்போ சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை தருணம் இதுதான் சரணம்போடு தர்ம‌ சஸ்தா பாதம்பாடு (சரணம் விளித்தால்) காக்கும் தெய்வம் திருமால் நாமம் கருணை செய்யும் ஈஸ்வர‌ நாமம் கலந்து மகிழ்ந்த‌ ஐயன் நாமம் கூவி வந்தால் புவியில் ஷேமம் (சரணம் விளித்தால்) காடும் மேடும் வீடும் வாசல் கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை ஆடும் மனத்தை அடக்கி வா வா …

K. Veeramani Ayyappan Songs – Saranam Pon Ayyappa

ஆனந்த‌ தாண்டவ‌ நாராஜன் ஆனந்த‌ முகில் வண்ணன் நாராயணன் ஆவலுடன் ஈன்றெடுத்த‌ அழகு மைந்தன் தேவர்கள் மகிழும் வண்ணம் தேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என்ற‌ திவ்ய‌ நாமத்தைச் சொன்னவர்க்கே தர்ம‌ சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக‌ எண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக் கண்ணன் மகனின் ஆலயத்தை வலம் வந்தவர்க்கே சர்வ‌ மங்கள‌ உண்டாகும் சத்தியமான‌ பொன்னு பதினெட்டுபடி மேல் ஏறி ஐயன் தரிசனத்தைக் காணச் செல்லுவோம் …

Seeridum Pulithanil Yeriye Valamvarum – K. Veeramani Ayyappan Songs

சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா உன்னைச் சிந்திக்க‌ மனமுண்டு சேவிக்கக் கரமுண்டு சாமியே ஐயப்பா (சீறிடும் ) சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா காரிருள் வழிதனில் ஜோதியாய் துணைவரும் கடவுளே ஐயப்பா உனைக் காணவே வழியுண்டு பாடவே மொழியுண்டு சுவாமியே ஐயப்பா (சீறிடும் ) வீரத்தின் விளை நிலம் வெற்றியின் அணிகலன் வேந்தனே ஐயப்பா உன்னை வாழ்த்தினால் பொருளுண்டு வணங்கினால் அருளுண்டு வள்ளலே ஐயப்பா ஈரேழு லோகமும் என்னாளும் வழிபடும் இறைவனே ஐயப்பா என் …

K. Veeramani Ayyappan Songa – Nallavarkal Koodum Malai

நல்லவர்கள் கூடும் மலை நன்மைகள் வழங்கும் மலை அல்லல்களை தீர்த்தாளும் ஐயனின் சபரிமலை இருமுடிகள் சேரும் மலை இருவினைகள் தீரும் மலை (நல்லவர்கள் கூடும் மலை) பதினெட்டுப் படிகள் மின்னும் பந்தளத்து மன்னன் மலை மாலை இட்டார் திரளும் மலை ஓங்கினுப்பார் வண‌ங்கும் மலை காலமெல்லாம் உலகனைத்தும் காக்கும் எங்கள் ஐயன்மலை தவமிருக்கும் தெய்வமலை தன் அருளை பொழியும் மலை மகரச்சுடர் ஒளிவடிவில் மணிகண்டன் தோன்றும் மலை

Ayyappa Swamy Mangalam for KJ Yesudas

சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம் தவமுனிவர் போற்றும் அந்த சன்னதிக்கு மங்களம் இபமுகவன் முருகனுக்கு இளையனுக்கு மங்களம் இன்பமெல்லாம் தந்தருளும் இறைவனுக்கு மங்களம் புலி மிசையே பவனிவரும் புனிதருக்கு மங்களம்