Arumuga Swami Virutham in Tamil
ஆறுமுக சுவாமி விருத்தம் அறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அலங்கார ஆபரண மணிந்த மார்பும் திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும் ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யா முருகா சரவணபவனே கார்த்திகேயா முக்கணனார் புத்திரனே உக்ரவேலா இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா இதுசமயம் அடியாரை ரட்சிப்பாயே ! மயிலேறி விளையாடும் சுப்ரமண்யா வடிவேலா உன்பாதம் நம்பினேனே உயிரிழந்து அபகீர்த்தியாகும் வேளை உன்செயலால் இதுசமயம் உயிரைக்காத்தாய் தயவாக இனிமேலும் உயிரைக் காத்து சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய் வயிபோக மானமலைப் பழநிவேலா வரமளித்து …