Sani Peyarchi 2017 to 2020 Predictions for Sagittarius Sign

2017 சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

When is Sani Peyarchi in 2017?

2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும்

எதிலும் தனித்து நிற்கும் தனுசு ராசிக்காரர்களே…

இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும்.

எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். ஜன்மச் சனி என்பதால், உடல் ஆரோக்கியத் தில் மட்டும் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்படும். சிலர் உங்களைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு கட்டும் பணிக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வி.ஐ.பி-களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். மகளுக்கு, திருமணம் கூடிவரும். மகனின் மனப்போக்கு மாறும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத் துணைக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடு செய்வது நல்லது. மற்றவர்களின் ஆலோசனைகளை நம்பி, பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டாம். லாபம் கணிசமாக உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். புதிய அதிகாரியின் வரவால் உற்சாகம் அடைவீர்கள். தேவையில்லாமல் விடுமுறை எடுக்கவேண்டாம். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளவும்.

மாணவ – மாணவிகளே! பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், மொழிப் பாடங் களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைத் துறையினரே! வீண் வதந்திகள் குறித்து கவலைப்பட வேண்டாம். சம்பள விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளாதீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருவதுடன் அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவதற்குத் துணை புரிவதாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19; 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண் டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். 25.2.20 முதல் 16.7.20 வரஒ மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:

29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும், மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளை களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் கூடி வரும். சனி பகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறன் கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகச் செல்வதால், விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

பரிகாரம்:

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சகல பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.