Sani Peyarchi 2017 to 2020 Predictions for Leo Sign

2017 சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 60/100

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

When is Sani Peyarchi in 2017?

2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும்

தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே…!

இதுவரை 4-ம் வீட்டில் இருந்த சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 5-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார். இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். பணவரவு அதிகரிக்கும்.

கணவன் – மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் இணக்கமாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரிகளே! பற்று வரவு உயரும். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களைப் பயன்படுத்தி, விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.-க்களும் வாடிக்கை யாளர்களாக அறிமுகம் ஆவார்கள். ஏற்றுமதி – இறக்குமதி, கடல்வாழ் உயிரினங்கள், ஏஜென்சி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! பணிச் சுமை குறையும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளி நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். மாணவ – மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வீர்கள். கலைத் துறையி னருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, குழப்பங் களில் இருந்து உங்களை விடுவிப்பதுடன், வெளி வட்டாரத்தில் செல்வாக்கு ஏற்படுத்துவதாகவும் அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.17 முதல் 18.1.19 வரை மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், சொத்துச் சேர்க்கையுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. பூரம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும் யோகாதிபதியு மாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை; 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், வீடு,வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிநாதனாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். கௌரவ பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். ஆனால், மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக் கிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:

29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்னை தொல்லை தரும். ஆரோக்கியம் மேம்படும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை; 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால் வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை உண்டாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வ தால், இக்காலக்கட்டத்தில் செல்வாக்கு, புகழ் கூடும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

பரிகாரம்:

திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த வல்லி உடனுறை ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். சகலமும் நன்மையில் முடியும்.

Source: Vikatan.com