முறுக்குவடை
தேவையானவை:
பச்சரிசி – 4 கப்,
உளுத்தம் பருப்பு – ஒன்றரைகப்
, உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும், நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும். சற்று உலர்ந்து சிறிது ஈரத்தோடு இருக்கும்போதே பொடிக்கவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும், உப்பும் போட்டு மாவு மென்மையாக இருக்க வேண்டும். திட்டமாக மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்குபோல் செய்யவும். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுத்து சூடாகப் பரிமாறவும்.