தாயும் அப்பனும் நீதான் சாமி
தாயும் அப்பனும் நீதான் சாமி
தலைவலி தீத்தவனும் நீதான் சாமி
தவக்கோலம் கொண்டவனும் நீதான் சாமி
தனஞ்செயன் சுதனும் நீதான் சாமி
அடியவர் மித்ரனும் நீதான் சாமி
அகக் கடவுளும் நீதான் சாமி
கரிமலை தேவனும் நீதான் சாமி
கருணையுள்ளம் கொண்டவனும் நீதான் சாமி
நீலிமலை பாலனும் நீதான் சாமி
நினைத்ததை அருள்பவனும் நீதான் சாமி
எரிமேலியில் இருப்பதும் நீதான் சாமி
எங்கள் குலதெய்வமும் நீதான் சாமி
பரம தயாளனும் நீதான் சாமி
பாவன லோலனும் நீதான் சாமி
பக்தருக்கு அருள்வதும் நீதான் சாமி
காண்பதற்கு எளியவனும் நீதான் சாமி
காத்து ரக்ஷிப்பதும் நீதான் சாமி
தரணி ஆள்பவனும் நீதான் சாமி
என் ஐயன் ஐயப்பசாமி!