திருப்புகழ் பாடல் 231 – சுவாமி மலை
தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த …… தனதான
முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
முளரி வேரி முகைய டர்ந்த …… முலைமீதே
முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து
முகமொ ராறு மிகவி ரும்பி …… அயராதே
அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை
அடைய வாரி மிசைபொ ழிந்து …… னடிபேணி
அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி
னடிமை யாகு முறைமை யொன்றை …… அருள்வாயே
தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து
தமர வேலை சுவற வென்ற …… வடிவேலா
தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு
தரணி யேழும் வலம்வ ருந்திண் …… மயில்வீரா
மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து
வலிய காவல் புனைய ணங்கின் …… மணவாளா
மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி
வளர்சு வாமி மலைய மர்ந்த …… பெருமாளே.
DivineInfoGuru.com