மிதுனம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | Midhunam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள்

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிரகங்கள் ராகுவும் கேதுவும். இவ்விரு நிழல் கிரகங்களுக்கு தனி வீடுகள் என்பது கிடையாது. ஆகவே இந்த கிரகங்கள் 12 ராசி வீடுகளில் எந்த வீட்டில் இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வார்கள்.

போக காரகனான ராகுவும்,ஞான காரகன் ஆன கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள்.

அந்தவகையில், ராகு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்,
கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

சர்ப்ப கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 மிதுன ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மிதுனம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மிதுனம் | Midhunam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

ராகு கேது பெயர்ச்சியின் மூலம் செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் இருக்கக்கூடிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கடன் நிமித்தமான பிரச்சனைகள் குறையும். ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

உங்களின் மீதான இருந்து வந்த சில வதந்திகளுக்கு முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலருடைய தனவரவுகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுடைய செயல்பாட்டில் அவர்களின் விருப்பமில்லாமல் தலையிட வேண்டாம். பிற மொழி பேசும் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொருளாதாரம் தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் வீண் விரயங்களை குறைத்து சேமிப்பை மேம்படுத்த இயலும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மிதுனம் – பணி/வேலை எப்படி இருக்கும்?

பணியில் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு காலதாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பும் பாராட்டுக்களும் கிடைக்க பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உடன் இருக்கக்கூடியவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வேலை நிமித்தமான பொறுப்புகள் ஓரளவு குறையும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அனுபவமும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுவீர்கள். பிறமொழி சார்ந்த துறை மற்றும் கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மிதுனம் – அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கும்?

அரசியல்வாதிகளுக்கு கட்சி நிமித்தமான பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களிடத்தில் காணப்பட்ட குறைகளை நிறைகளாக மாற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுக்கான மதிப்பும் மரியாதையும் மேம்படும். பத்திரிகை சார்ந்த துறைகளில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மிதுனம் – தொழில்/வியாபாரம் எப்படி இருக்கும்?

வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் உழைப்பிற்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்க பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் மனம் பெற்று பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். எதிர்பாராத பொருட்சேர்ப்பை உண்டாகும். மறைமுகமாக இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். புதிய மனை சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். குறுகிய கால பயிர்களின் மூலம் நன்மை உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மிதுனம் – உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களில் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதிய வகை உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். துரித உணவுகளை தவிர்ப்பது அஜீரண கோளாறுகளை குறைக்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மிதுனம் – குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

தம்பதியர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களிடம் கருத்துக்களை பரிமாறும்போது நிதானம் வேண்டும். ஒரு சிலருக்கு தாய்மாமன் வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். காதலர்கள் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு கிடைக்க பெறுவீர்கள். தாய் வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குழந்தைகளிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மிதுனம் – மாணவர்களுக்கு எப்படி இருக்கும்?

மாணவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாக அமையும். வித்தியாசமான யுக்திகளை பயன்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். உயர்நிலைக் கல்வியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மிதுனம் ராகு கேது பெயர்ச்சி 2023-2025 பரிகாரம்

  • தினந்தோறும் ராகு கேதுவுடன் இருக்கக்கூடிய விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் மேலும் பல நற்பலன்களை பெற முடியும்.
  • விநாயகருக்கு பஞ்சினால் ஆன திரியில் மாலை செய்து சாற்றி வழிபட வேண்டும்.
  • புதன் கிழமையில் விநாயகர் வழிபடும், சதுர்த்தி வழிபடும் நன்மை பயக்கும்.
  • உளுந்து, கொள்ளு, பச்சை பயறு ஆகியவற்றை அல்லது இவற்றால் செய்த உணவுகளை தானம் அளித்தல்.