சிம்மம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | Simmam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள்

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிரகங்கள் ராகுவும் கேதுவும். இவ்விரு நிழல் கிரகங்களுக்கு தனி வீடுகள் என்பது கிடையாது. ஆகவே இந்த கிரகங்கள் 12 ராசி வீடுகளில் எந்த வீட்டில் இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வார்கள்.

போக காரகனான ராகுவும்,ஞான காரகன் ஆன கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள்.

அந்தவகையில், ராகு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்,
கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

சர்ப்ப கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 சிம்ம ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சிம்மம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் சிம்மம் | Simmam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக தடைகள் குறையும். பொருள் வரவு, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பிறமொழி பேசும் பிரபலமானவர்கள், உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். பிடித்த வீடு, வாகனத்தை மாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தெளிவான தீர்வினை தெரிந்துகொள்வீர்கள். தேவையற்ற சிந்தனைகளை அகற்றி தன்னம்பிக்கையுடன் செயல் படுங்கள். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடப்பது நல்லது. பாகப்பிரிவினை விவகாரத்தில் பொறுமையாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையற்ற இடங்களில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராத சில தனவரவுகள் மூலம் மேன்மை உண்டாகும்.

பொருளாதாரத்தில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். ஆடம்பர எண்ணங்களை குறைப்பது நல்லது. தாயாரின் உடல்நிலையில் இருந்த பிரச்சனைகள் குறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல் பட வேண்டும். காது சம்மந்தமான பிரச்சனைகள் வந்து நீங்கும். தந்தை வழியில் விரயங்கள் உண்டாகும். கர்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கவனம் தேவை. மனதில் இருந்த சஞ்சலங்கள் குறையும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் சிம்மம் – மாணவர்களுக்கு எப்படி இருக்கும்?

மாணவர்கள் கல்வியில் இருந்த சோம்பல்கள் குறைந்து சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். உயர்கல்வியில் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். வெளியூர்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நியாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் சிம்மம் – உத்தியோகம் மற்றும் தொழில் எப்படி இருக்கும்?

சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். கணினி தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் சிம்மம் – பொதுப்பலன்கள்

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விளைச்சலில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் உண்டாகும். கடின முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். தம்பதியர்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

சிம்மம் ராகு கேது பெயர்ச்சி 2023-2025 பரிகாரம்:

  • வெள்ளிக்கிழமை தோறும் நாகதேவதைகளை வழிபாடு செய்தால் வரப்போகும் தடைகள் நீங்கி சாதகமான சூழல் ஏற்படும்.
  • புதன் கிழமைகளில் மௌன விரதம் இருத்தல்.
  • வியாழக் கிழமைகளில் குருமார்களுக்கு அன்னம் அளித்தல்.
  • ஜீவ சமாதி வழிபாடு நன்மை பயக்கும்