சக்தி கொடுப்பவனே சரணம் பொன் ஐயப்பா!
சக்தி கொடுப்பவனே சரணம்
பொன் ஐயப்பா!
சங்கீத பிரியனே சரணம்
பொன் ஐயப்பா!
கலிகால வரதனே சரணம்
பொன் ஐயப்பா!
காவி கரையிருப்பவனே சரணம்
பொன் ஐயப்பா!
அற்புத விக்ரஹனே சரணம்
பொன் ஐயப்பா!
அன்பான தெய்வமே சரணம்
பொன் ஐயப்பா!
மோகினியாள் பாலகனே சரணம்
பொன் ஐயப்பா!
மோகமெல்லாம் தீர்த்திடுவாய் சரணம்
பொன் ஐயப்பா!
எருமேலி தர்ம சாஸ்தாவே சரணம்
பொன் ஐயப்பா!
எங்களை நீ காக்க வேண்டும் சரணம்
பொன் ஐயப்பா!
ஆறுவாரம் நோன்பிருந்தோம் சரணம்
பொன் ஐயப்பா!
அடிபணிந்தே தெண்டனிட்டோம் சரணம் பொன் ஐயப்பா!
சபரி சன்னிதானம் வந்தடைந்தோம் சரணம் பொன் ஐயப்பா!
சகல வினை தீர்த்தருள்வாய் சரணம்
பொன் ஐயப்பா!