திருப்புகழ் பாடல் 31 – Thiruppugazh Song 31 – இயலிசையி லுசித: Iyalisaiyil Usitha

திருப்புகழ் பாடல் 31 – திருச்செந்தூர்
ராகம் – ஹூஸேனி; தாளம் – அங்கதாளம் (9)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தனதனன தனன தந்தத் …… தனதான

இயலிசையி லுசித வஞ்சிக் …… கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் …… துழலாதே

உயர்கருணை புரியு மின்பக் …… கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் …… தருவாயே

மயில்தகர்க லிடைய ரந்தத் …… தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் …… தணைவோனே

கயிலைமலை யனைய செந்திற் …… பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் …… பெருமாளே.