திருப்புகழ் பாடல் 165 – பழநி
ராகம் – ஹமீர் கல்யாணி; தாளம் – ஆதி (12)
தனன தனன தனன தனன
தனன தனன …… தனதான
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் …… அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய …… எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு …… மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு …… தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி …… மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி …… மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் …… தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய …… பெருமாளே.