திருப்புகழ் பாடல் 228 – சுவாமி மலை
ராகம் – காபி, தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி 2
தான தனதன தான தனதன
தான தனதன …… தனதான
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய …… குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய …… மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு …… மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட …… அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு …… சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு …… மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி …… லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல …… பெருமாளே.