திருப்புகழ் பாடல் 260 – திருத்தணிகை
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன …… தனதான
கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
கபட நாடக விரகிக ளசடிகள்
கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் …… விரகாலே
க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
முழுது நாறிக ளிதமொழி வசனிகள்
கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் …… பொருளாலே
பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
அதிக மாவொரு பொருள்தரு பவரொடு
பழைய பேரென இதமுற அணைபவர் …… விழியாலே
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை
பகர மாமயில் மிசைவர நினைவது …… மொருநாளே
அரிய ராதிபர் மலரய னிமையவர்
நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ
அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக …… இளையோனே
அரிய கானக முறைகுற மகளிட
கணவ னாகிய அறிவுள விதரண
அமரர் நாயக சரவண பவதிற …… லுடையோனே
தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
சரிவு றாநிலை பெருதவ முடையவர்
தளர்வி லாமன முடையவ ரறிவினர் …… பரராஜர்
சகல லோகமு முடையவர் நினைபவர்
பரவு தாமரை மலரடி யினிதுற
தணிகை மாமலை மணிமுடி யழகியல் …… பெருமாளே.